Monday, February 1, 2010

ஒரு ஜீவன் முக்தனின் கதை

அம்மா வீட்டுல தனியா உக்காந்திருக்காங்க. ஏன்னா, அப்பா கண்ண மூடி தியானம் பண்ணிகிட்டு இருக்கார். அதுனால, தனியா இருகாங்கன்னு சொல்லலாம். வேற வழியில்லாம, அவங்கள தொந்தரவு பண்ண ஆரம்பிக்கிறாங்க. எல்லார் வீட்டுலயும் நடக்கிறதுதான.

அம்மா: ஏங்க விளையாடப்போன நம்ம பசங்க இன்னும் வரலீங்க, போயி என்னன்னு கொஞ்சம் பாருங்க...

அப்பா: போடி, உனக்கு வேற வேலையே இல்லடி. அவனுங்க என்ன சின்ன கொழந்தையா, விளையாடிகிட்டுதான் இருப்பாங்க. என்ன தொந்தரவு பண்ணாத. சும்மா இரு.

அம்மா: இல்லங்க, ரொம்ப நேரமாச்சு. போயி கொஞ்சம் பாருங்க... அப்புறமா தியானம் பண்ணுங்க.

அப்பா: போடி, இதுக்குதான் அப்பவே சொன்னேன், கொழந்தையெல்லாம் வேண்டாம்னு. கேட்டாதானே. நீயெ போய் பாரு. என்ன தொந்தரவு பண்ணாத.

அம்மா: சேரி. நானே போய் பாக்குறேன்.

அம்மா பசங்கள தேடிக்கிட்டு, விளையாடுற இடத்துக்கு வறாங்க. வந்து பாத்தா, பசங்க எல்லாம் பொம்மய வச்சிகிட்டு, நான் அப்பா, நீ அம்மான்னு சொல்லிகிட்டு, விளையாடுது.

அம்மா: நல்லா விளையாடுறீங்கடா கண்ணா. விளையாடுனது போதும், வாங்க வீட்டுக்கு போலாம். அப்பா தனியா இருக்கார்.

பசங்க: போம்மா. உனக்கு வெற வேலையேயில்ல. எப்பபாத்தாலும், பாதி விளையாட்ல, வீட்டுக்கு வா, வீட்டுக்குவான்னு தொந்தரவு பண்ணிகிட்டே இருக்க. நீ போம்மா, நாங்க இன்னும் கொஞ்ச நேரம் விளையான்டுட்டு வரோம்.

அம்மா: சொன்னா கேளுங்கடா. விளையான்டது போதும். வீட்டுக்கு வாங்கடா. உங்களுக்கு புடிச்ச ஸ்வீட் பண்ணி தரேன்டா, நல்லா சாப்டுங்கடா.
பசங்க: நீ போம்மா, நாங்க அப்புறம் வரோம். உனக்கு ஒன்னும் தெரியாது.

அம்மா: சொன்னா கேளுங்கடா. போதும்டா. வீட்டுக்கு வாங்கடா, இல்லன்னா அப்பா கோவப்படுவாருடா, வாங்கடா.

பசங்க: நீ போம்மா, உனக்கு வேற வேலையில்ல.
அம்மா, பாவம் பசங்கன்னு சொல்லிட்டு, ரொம்ப நேரம் வேயிட் பண்றா. அத பாத்துட்டு, ரெண்டு பசங்க மட்டும், அம்மாகிட்ட வந்து, சரிம்மா, நம்ம போலாம்மா, அவங்க, வேணும்னா அப்புறம் வறட்டும்னு சொல்றாங்க. அப்புறம், மூனுபேரும், இன்னும் கொஞ்சம் நேரம் வெயிட் பண்ணிட்டு வீட்டுக்கு போறாங்க. வீட்டுக்கு இவங்க மூனுபேரும் வந்து ரொம்ப நேரம் கழிச்சு, அப்பா தியானத்துலேந்து கண்ணு முழிச்சு பார்கிறார்.

அப்பா: வாங்க. எங்க மத்த பசங்களெல்லாம்?

அம்மா: அவங்கெல்லாம் இன்னும் கொஞ்ச நேரம் விலையாடிட்டு வரேன்னு சொன்னாங்க.

அப்பா செமத்த டென்ஷனாய்ட்டார். உடனே, கிளம்பி போயி, விளையாட்டு சாமானையெல்லாம் உடைச்சி எறியறார். பசங்களெல்லாம் பயந்து போயி, அப்பாகூட ஒடி வந்துடுறாங்க.
அப்டின்னா நீ யாருடான்னு, கேக்றீங்களா? அப்பா வரத பாத்துட்டு ஒடி போயி ஒளிஞ்சிகிட்ட சில பசங்கள்ள நானும் ஒருத்தவன். எங்கப்பாவுக்கு, ஒளிஞ்ச எங்கள தெரியாதுன்னு நினைச்சேன். தெரிஞ்சே விட்டுட்டு போயிருக்கார்.
இப்ப திரும்ப விளையாடினாலும் 'போர் அடிக்குது'. திரும்ப வீட்டுக்கு போலாம்னா, வழி தெரியல. அப்பாவோட போக பயமாயிருக்கு. அதுனால அம்மாவுக்காக வேயிட் பண்ணிட்டுருக்கேன்(அவரோட விளையாட்ட அவர் விளையாடுறார் - ஆனா அதை திருவிளையாடல்னு சொல்றாங்க).
இப்ப திரும்ப அம்மா வந்து வெயிட் பன்றா. அப்பா, அம்மா, தங்கை, அண்ணா, மனைவின்னு கற்பனைல உருவாக்கின பொம்மையவிட்டுட்டு வர முடியாம தவிக்கிறேன்.....

இப்படிக்கு ஒரு ஜீவன் முக்தன் ........

No comments:

Post a Comment