Friday, August 7, 2009

ஜீவன் முக்தி

சுவாமி நித்யானந்தர் அவர்கள் ஒவ்வொரு மனிதனும் ஜீவன் முக்தனாக வாழ, பல தியான முறைகளை வகுத்துள்ளார்கள்
முதலில் 'ஜீவன் முக்தர்' என்று அவர் கூறுவது என்ன என்று தெரிந்து கொள்வோம் பின் அவ்வாறு வாழ தொடங்குவோம்.
எவன் ஒருவன்
1. மாற்ற முடிந்த எல்லாவற்றையும் மாற்றுகின்ற சக்தியுடனும்,
2. மாற்ற முடியாதவற்றை புரிந்து எற்று கொள்ளும் புத்தியுடனும்,
3. எது மாறினாலும், மாறாவிட்டாலும், இவை எல்லாம் ஒரு கனவு என்கின்ற யுக்தியுடனும் மற்றும்
4. மாறும் இந்த அனைத்து கனவுகளிடையேயும், மாறாமல் இருக்கும் அந்த கடவுளின் மேல் உள்ள பக்தியுடனும்
தன்னுடைய வாழ்கையை வாழ்கிறானோ, அவனே 'ஜீவன் முக்தன்' ஆகிறான்.
இந்த உலகத்தில் வாழும் உயிர்களுக்கு எல்லாம் சக்தியுன்டு. அந்த சக்தியில்லயேல் எந்த உயிர்களும் இயங்க முடியாது. ஒவ்வொறு உயிர்களுக்கும் சக்தியின் அளவு வேறுபடும். ஆனால் மனிதனுக்கு மட்டும் சக்தியுடன் கூடிய புத்தியும் உன்டு.
ஆகையால், மனிதன் தன்னுடைய சக்திகளைக்கொண்டு மாற்ற முடிந்த அனைத்தையும் மாற்ற வெண்டும். அப்படி செய்கையில், சக்தியைக்கொண்டு மாற்ற முடியாதவற்றை, எற்றுக்கொள்ளும் புத்தியை வளர்க்க வேண்டும். இப்படி சதா சர்வ காலமும் சக்தியை கொண்டு மாற்றியும், புத்தியை கொண்டு எற்றுக்கொள்ளும் தருவாயில், ' நடக்கும் யாவும் ஒரு கனவு' என்ற உணர்வு மாற்றம் வரும்.
அந்த உணர்வு மாற்றத்தில் இருக்கும் பொழுது, மாறாது இருக்கும் ஒன்றின் மேல், பக்தியுனர்வு பொங்கி எழும். இதுவே ஒவ்வொருவரும் 'ஜீவன் முக்தனாக' வாழ வழி.
சுவாமி நித்யனந்தர் 'ஜீவன் முக்தர்களை' பற்றி கூறும்போது, 'செக்யூரிடியை' தேடி ஓடாத மனிதன் தான் 'ஜீவன் முக்தன்' ஆவதற்கு அடிப்படை தேவையை பூர்த்தி செய்கிறான்னு சொல்லிட்டு கூடவே செக்யூரிடியை தேடி ஒடிய ஒரு மனிதனோட கதைய சொல்வார்.

ஒரு சிற்பி மலையை செதுக்கி கொண்டிருந்தார். அப்போ அந்த வழியா வந்த ஒரு எலி, கீழ வச்சிருந்த அவரோட சாப்பாட்ட சாப்பிட்ருச்சு. இந்த சிற்பி உடனே, 'இந்த எலியை பாரு நம்மலோட நல்ல வாழக்கையை வாழுது. பெசாம நாமலும் இந்த எலி மாதிரி வாழ்ந்தா நல்லா இருக்கும்'னு நெனச்சான்.

சரின்னு, அந்த ஊர்ல ஒரு சாமியர் கிட்ட போய், ' நான் அந்த எலியா மாறனும்னு' கேட்டான். அவரும், 'அப்படியே ஆகட்டும்னுட்டார். அப்புறம், அந்த எலிய ஒரு பூன துரத்துச்சாம். அவன் இந்த எலியோட அந்த பூன பலமா இருக்கேன்னுட்டு, பூனையா மாறனும்னு நினச்சானாம். அந்த சாமியர் கிட்ட போய் கேட்டான். சரி, ஆகட்டும்னு அவரும் சொல்லிட்டார்.

ஆனா அந்த பூனைய ஒரு நாய் துரத்துச்சாம். ச, நம்மலவிட இந்த நாய் பலமா இருக்கேன்னுட்டு, நாயா மாறனும்னு நினச்சானாம். அந்த சாமியர் கிட்ட போய் கேட்டான். சரி, ஆகட்டும்னு அவரும் சொல்லிட்டார்.

ஆனா அந்த நாய ஒரு சிறுத்த துரத்துச்சாம். ச, நம்மலவிட இந்த சிறுத்த பலமா இருக்கேன்னுட்டு, சிறுத்தயா மாறனும்னு நினச்சானாம். அந்த சாமியர் கிட்ட போய் கேட்டான். சரி, ஆகட்டும்னு அவரும் சொல்லிட்டார்.

ஆனா அந்த சிறுத்தயா ஒரு பாம்பு விரடுச்சாம். ச, நம்மலவிட இந்த பாம்பு பலமா இருக்கேன்னுட்டு, பாம்பா மாறனும்னு நினச்சானாம். அந்த சாமியர் கிட்ட போய் கேட்டான். சரி, ஆகட்டும்னு அவரும் சொல்லிட்டார்.

ஆனா அந்த பாம்ப ஒரு கழுகு துரத்துச்சாம். ச, நம்மலவிட இந்த கழுகு பலமா இருக்கேன்னுட்டு, கழுகா மாறனும்னு நினச்சானாம். அந்த சாமியர் கிட்ட போய் கேட்டான். சரி, ஆகட்டும்னு அவரும் சொல்லிட்டார்.

ஆனா அந்த கழுக காத்து அலைகழிச்சுதாம். ச, நம்மலவிட இந்த காத்து பலமா இருக்கேன்னுட்டு, காத்தா மாறனும்னு நினச்சானாம். அந்த சாமியர் கிட்ட போய் கேட்டான். சரி, ஆகட்டும்னு அவரும் சொல்லிட்டார்.
ஆனா அந்த காத்துக்கு அசயாம ஒரு மலை நின்னுக்கிட்டு இருந்துச்சாம். ச, நம்மலவிட இந்த மலை பலமா இருக்கேன்னுட்டு, மலையா மாறனும்னு நினச்சானாம். அந்த சாமியர் கிட்ட போய் கேட்டான். சரி, ஆகட்டும்னு அவரும் சொல்லிட்டார்.
ஆனா அந்த மலைய ஒரு சிற்பி செதுக்கிகிட்டு இருந்தானாம். 'செக்யூரிட்டிய தெடி போற வாழ்க்கை', இப்படித்தான் சுத்தி சுத்தி போகும்.
அதுனால, செக்யூரிட்டிய தெடி போகாம, வாழ்கைல நடக்குற எல்லாத்தையும் ஏத்துக்கிட்டு, அதோட வழியில போறதுதான் 'ஜீவன் முக்தி'னு சொல்றார்.

நாமும் அவ்வண்ணமே செல்ல, நம்மால் ஆன முயர்ச்சியை செய்வோம்.
மேலும் சுவாமியின் சொற்பொழிவுகளை காண, பின்வரும் இணையதளத்திற்கு செல்க: http://www.youtube.com/user/Dhyanapeetamtn

No comments:

Post a Comment